Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முதல்நாள் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன : தெரிவுக்குழு முன் வெளியான தகவல்

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முதல்நாள் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன : தெரிவுக்குழு முன் வெளியான தகவல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முதல் நாளான ஏப்ரல் 20ஆம் திகதி மாலை அந்த தாக்குதல் தொடர்பான உறுதியான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க தவறியுள்ளதாக தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருந்த மூவரடங்கிய விசேட குழுவினர் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு நேற்று கூடிய போது அந்த குழு முன்னிலையில் ஜனாதிபதி குழுவின் உறுப்பினர்களான உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் குமார மலல்கொட , முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் , முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் சாட்சியமளித்தனர்.
தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வு தகவல்கள் வெளியாகியிருந்த போதும் சரியான வகையில் புலனாய்வு தகவல்கள் கொண்டு செல்லப்படவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பாக செயற்படும் புலனாய்வு பிரிவுகள் பல உள்ளன. இவற்றின் தொடர்பாடல் தொடர்புகள் தொடர்பாக குறைபாடுகள் உள்ளன. 4 , 5ஆம் திகதிகளில் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்பட்டிருக்கவில்லை. ஏப்ரல் 9ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடையில் புலனாய்வு தகவல்கள் தொடர்பாக இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தோம். 20ஆம் திகதி மாலை தாக்குதல் தொடர்பான உறுதியான புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல்களுக்கமையவாவது நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். அந்த தகவல் வந்த பின்னர் 16 மணித்தியால காலம் இருந்துள்ளது. அந்த காலத்திற்குள் நடவடிக்கையெடுடுத்திருக்கலாம். ஆனால் நடவடிக்கையெடுக்க தவறிவிட்டனர். என அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *