Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் பற்றிய தெரிவுக்குழு இன்று கூடுகிறது

ஏப்ரல் 21 தாக்குதல் பற்றிய தெரிவுக்குழு இன்று கூடுகிறது

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த குழு கூடவுள்ளதுடன் இரவு 9 மணி வரையில் சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன , அந்த திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர , பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தர மற்றும் அந்த பிரிவுக்கு பொறுக்காகவிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஆகியோர் சாட்சியளிக்கவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *