Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் பற்றி விசாரிக்க ஜனதிபதியினால் ஆணைக்குழு அமைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி அதபத்து லியனகே பந்துல குமார மற்றும் ஓய்வு பெற்ற அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரீ ஆகியவர்கள் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *