Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை பூர்த்தி

ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை பூர்த்தி

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளது.
இக்குழுவினர் இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இன்று கேட்ட கேள்விக்கு ஆளும் தரப்பில் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக பதில் அளிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
சட்டமா அதிபரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் எதிர்கால நடவடிக்கைக்கு அவரினால் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. பொலிஸாரும் சம்பந்தப்பட்ட பிரிவினரும் இது தொடர்பான உண்மையான தகவல்களை நாட்டு மக்களுக்கு வழங்கி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *