Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குல் விவகாரம் : செயற்குழு முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் சாட்சியம்

ஏப்ரல் 21 தாக்குல் விவகாரம் : செயற்குழு முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் சாட்சியம்

பாதுகாப்பு தொடர்பான முறைமைகளில் காணப்பட்ட குறைபாடுகளே ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாகுமென கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் தன்னை பாதுகாப்பு சபைக்கு அழைக்க வேண்டுமென்ற போதிலும் கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படும் வரையில் தன்னை பாதுகாப்பு சபைக்கு அழைக்கவில்லையெனவும் தன்னை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்திருந்ததாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் 3 மணித்தியாலங்கள் அந்த குழு முன்னிலையில் சாட்சிமளித்தார்.
இதன்போது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான புலனாய்வு அறிக்கையை தான் ஏப்ரல் 9 ஆம் திகதியே பெற்றுக்கொண்டதாகவும் அதன்பின்னர் தான் தன்னால் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ள அவர் அது தொடர்பாக மற்றைய அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டார்களா என தெரியவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தி வந்ததாகவும் ஆனால் தான் அவ்வாறாக பதவி விலக வேண்டிய அவசியமில்லாத காரணத்தினால் அதனை செய்யவில்லையெனவும் ஆனபோதும் தன்னை பதவி விலகினால் தனக்கு எங்கேனும் தூதுவர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தாகவும் ஆனால் பொலிஸாரை காட்டிக்கொடுக்க தனக்கு மனம் கொடுக்காமையினால் தான் அவ்வாறு செய்யாத நிலையிலேயே தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 9 மாதங்களாக தன்னை பாதுகாப்பு சபைக்கே அழைக்க வேண்டாமென கூறிவிட்டு இப்போது சம்பமொன்று இடம்பெற்ற பின்னர் அதற்கு நானே காரணமென பொறுப்பேற்று பதவி விலகுமாறு கூறுவது நியாமற்றது எனவும் இது கூட்டுப்பொறுப்புடன் கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணப்பட்ட முறைமைகளில் குறைபாடுகள் இருந்துள்ளதாகவும் அதனை திருத்தி சரியான முறைமைக்குள் கொண்டு வர வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *