Search
Saturday 25 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஏறாவூரில் முதியவர் தூக்கில் தொங்கி மரணம்

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரசேத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலமொன்று நேற்று திங்கட் கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை நடுவில்தம்பி வீதியிலுள்ள சுப்பிரமணியம் நாராயணப்பிள்ளை (வயது 64) என்பரே தனது மகளுடைய வீட்டு சுவாமியறைக்குள் கழுத்தில் நைலோன் கயிறு சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையாகிய குறித்த நபர் தனது மனைவி வெளிநாடு சென்றவேளை அவரின் மகளாகிய வானுமதி வீட்டில்தான் வசித்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தூக்கில் தொங்கி உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்வம் தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *