Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்ப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்ப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில் பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டிருந்த போதும் இலங்கை விவகாரங்கள் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. எனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து, இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் என்பன குறித்து, இந்த அமர்வில் கரிசனை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *