Search
Monday 24 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐந்தாவது நாளான நாளை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி இலக்கை அடைவார்கள்- திமுத் கருணாரட்ன நம்பிக்கை

ஐந்தாவது நாளான நாளை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி இலக்கை அடைவார்கள்- திமுத் கருணாரட்ன நம்பிக்கை

சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான நாளை சுழற்பந்து வீச்சு சவாலை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்
வெற்றி பெறுவதற்காக 388 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை விளையாடிவரும் அணி நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது
இந்நிலையில் இறுதிநாள் நிலவரம் எவ்வாறு காணப்படும் என கருத்து தெரிவித்துள்ள திமுத் கருணாரட்ன எங்களால் வெற்றி இலக்கை அடையமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்
நாங்கள் ஏற்கனவே 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளோம் இன்னமும் 218 ஓட்டங்களை மாத்திரம் பெற வேண்டியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஆடுகளத்தின் சில பகுதிகள் மாத்திரம் சிம்பாப்வேயிற்கு உதவியாக அமையப்போகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

265968
மத்தியுஸ் மற்றும் குசால் மென்டிஸ்இருவரும் நாளை ஓரு மணித்தியாலம் ஆட்டமிழக்காமல் விளையாடினால் போதும் அதன் பின்னர் போட்டி மிகுந்த சுவாரஸ்யம் மிகுந்ததாக மாறிவிடும் துடுப்பாட்ட வீரர்கள் ஏதாவது தவறு செய்யாத பட்சத்தில் அவர்களை ஆட்டமிழக்க செய்வது கடினம் அவர்கள் கால்பக்கத்தில் அதிக களத்தடுப்பாட்ட வீரர்களை வைத்து அதற்கு ஏற்றால்போல் பந்து வீசுகின்றார்கள் நாங்கள் அதனை மாற்றவேண்டும் ரிவேர்ஸ் ஸ்வீப் விளையாடலாம் அவ்வாறு செய்தால் அதிக ஓட்டங்களை வேகமாக பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தப்பிப்பிழைப்பதை மாத்திரம் நோக்கமாக கொண்டு விளையாடினால் போட்டியில் தோற்கவேண்டிவரும் சாதகமான மனோநிலையில் விளையாடவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *