Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்

ஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் தலை­வ­ரான உங்­க­ளையும் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தாச மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளான மங்­கள சம­ர­வீர ராஜித சேனா­ரத்ன ஆகி­யோரை ஒன்­றாக சந்­தித்து பேச­வி­ரும்­பு­கின்றோம். இதற்­கான ஏற்­பா­டு­களை செய்ய வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கோரி­யுள்ளார்.

குறித்த சந்­திப்பில் எடுத்­துக்­கூ­றிய விட­யங்கள் தொடர்பில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­விக்கையில் தமிழ் மக்கள் எத்­த­கைய மனோ­நி­லையில் இருக்­கின்­றார்கள் என்­பது உங்­க­ளுக்குத் .தெரிந்­தி­ருக்கும். ஏனெனில் எங்­க­ளு­டைய மக்கள் வெறுப்பு, அதி­ருப்தி, விரக்தி எல்­லா­வற்­று­டனும் தான் இருக்­கின்­றார்கள். மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தாய்­மார்கள் தங்கள் பிள்­ளை­களைத் தேடி போராட்டம் செய்­கின்­றார்கள். நீங்கள் யாரும் இதனைக் கண்­டு­கொள்­ள­வில்லை.

இங்கு வேலை­வாய்ப்­பிற்­காக 93 தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்­களை இணைத்­துள்­ளீர்கள். இது மட்­டு­மன்றி மின்­சார சபையின் மின்­மானி பரி­சோ­த­னைக்­காக தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். வன­வி­லாகா உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் உள்­ளார்கள். இவ்­வாறு செய்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் எவ்­வாறு தமிழ் மக்கள் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பார்கள்.குறித்த விட­யத்தில் ஏதா­வது மாற்­றங்கள் செய்­ய­மு­டி­யுமா? மேலும் அர­சியல் தீர்வு என்­பது வேறொரு பிரச்­சினை. யுத்­த­திற்கு பின்­ன­ரான சூழலில் அதிலும் இந்த அரசின் காலத்தில் இன்னும் பல புதிய பிரச்­சி­னை­க­ளையே உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள் என்ற விட­யத்தை எடுத்­து­ரைத்­துள்ளேன்.மேலும் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முயற்­சி­யினால் ஒன்­றி­ணைந்த கட்­சியின் தலை­வர்கள் உங்­களைச் சந்­திக்­கின்­ற­போது மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடமுடியும்.

இந்தச் சந்திப்பிற்கு கட்சியின் தலைவர் என்றரீதியில் நீங்களும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் மங்கள சமரவீர ராஜித சேனாரட்ண போன்றேரை ஒன்றாக சந்திப்பதற்கு விரும்புகின்றோம் எனக்கூறியிருந்தேன் என தெரிவித்துள்ளார்.இதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விடயம் தொடர்பில் ஏற்­கெ­னவே சுமந்­திரன் எம்.பி. பேசி­யுள்­ள­தா­கவும் கொழும்பு திரும்­பி­யதும் சந்­திப்­புக்­கான ஏற்­பாட்­டினை செய்­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *