Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐயா ஆளுநரே அதிமெத்த படிப்பு படிச்சவரே !

ஐயா ஆளுநரே அதிமெத்த படிப்பு படிச்சவரே !

ஐயா ஆளுநரே அதிமெத்த படிப்பு படிச்சவரே -பதவியால்
மெய்யாக வடக்கிலே சேவை செய்வேன் என்றவரே
கையாலாகாதோர் துயர் துடைத்தல் கடமை என்று
ஐயோ நீர்போட்ட நாடகங்கள் பார்த்து வந்தோம்

எய்யாத அம்பு நீரென்று எண்ணி ஐயம் கொண்டோர்க்கு -ஐ .நாவில்
பொய் உரைத்து உம் சாயம் வெளிப்பட வைத்தவரே
நெய்யை எடுப்பமெண்டு நீர் தயிரை கடைகையிலே
பைய தாழியுடைந்து பாழாகி போனதுதான் உம்கதையும்

தந்த பதவியை தான் தக்கவைக்க வேணுமெண்டு- எம்
வெந்த நெஞ்சிலே வேல்பாய்ச்சும் வேலைகள் வேண்டாமையா
பந்தம் பிடித்தாலும் பகைவன் பகைவன்தானென சிந்தை செய்து
சொந்த இனத்திற்கு இனியும் துரோகம் செய்ய வேண்டாமையா

கொற்றவை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *