Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளது

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து நீக்குமாறு பல நாடுகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளது.2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கட்டது.தொடர்ந்து 14 வருடங்களாக இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது.இந்த விடயம் தென்னிந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *