தலைப்பு செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பே அநேகமாக காரணமாக இருக்கலாம்: பிரித்தானியா டெய்லி மிரர் பத்திரிகை பாதுகாப்பு ஆசிரியர்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பே அநேகமாக காரணமாக இருக்கலாம்: பிரித்தானியா டெய்லி மிரர் பத்திரிகை பாதுகாப்பு ஆசிரியர்

இலங்கையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது அதனுடன் தொடர்புடைய அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான அடையாளங்களே அதிகம் காணப்படுவதாக பிரித்தானியாவின் டெய்லி மிரர் பத்திரிகையின் பாதுகாப்பு விடயங்களுக்கான ஆசிரியர் கிறிஸ் ஹுயூகஸ் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையில் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் இன்றைய பத்திரிகையில் சிறு ஆய்வு ஒன்றை எழுதியுள்ள அவர், இந்த தாக்குதல்கள் இலங்கை மற்றும் மேற்கு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து போராடுவதற்கு பல முஸ்லீம் இளைஞர்கள் சென்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன என்றும் அந்த அடிப்படையில் இந்த தாக்குதல்களுக்கு அவர்களை சந்தேகிக்க முடியும் என்றும் அவர் எழுதியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில் அதனை குறிக்கும் வகையில் தமிழ் அமைப்புக்கள் ஏதும் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சிலர் சந்தேகிக்கக் கூடும் என்ற போதிலும், கிறிஸ்தவர்களையும் மேற்கு நாட்டவர்களை அவர்கள் ஏன் இலக்கு வைக்க வேண்டும் என்று அவவ்ர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஏற்பட்ட மோசமான தோல்விகளுக்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.

இதே கருத்தையே பிரித்தானியாவின் த டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு விவகார ஆய்வாளர், ரிச்சர்ட் ஸ்பென்சர் எழுதியுள்ளார். சுமார் 32 இலங்கையர்கள் இலங்கையில் இருந்து ஐ. எஸ் .ஐ. எஸ் அமைப்புக்கு போராடுவதற்காக சிரியா மற்றும் ஈராக் ஆகிய  நாட்களுக்கு சென்றதாக இலங்கை ஆர்சங்கம் 2016 ஆம் ஆண்டு தகவல் வெளியிட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *