Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க சஜித் அணி மீண்டும் முயற்சி

ஐ.தே.க தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க சஜித் அணி மீண்டும் முயற்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கான யோசனையை கொண்டு வருவதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது பக்கத்தில் இருப்பதால் ஐக்கிய தேசிய கட்சியினால் எடுக்கும் எந்த தீர்மானமும் செல்லுபடியற்றது எனவும் இதனால் தமது பக்கத்தில் உள்ள மத்திய செயற்குழுவினால் தீர்மானங்கள் எடுக்க முடியுமெனவும் தெரிவித்துள்ள சஜித் தரப்பினர் இதன்படி ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரத்திற்குள் அந்த யோசனையை அவர்கள் மத்திய செயற்குழுவில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ரணில் தலைமையில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் சஜித் உள்ளிட்ட 99 பேரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *