செய்திகள்

ஐ.தே.முவிலிருந்து விலகி தனித்து போட்டியிட த.மு.கூ திட்டம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடாது தனித்து போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியான சின்னமொன்றில் 22 மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கு அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் இது தொடர்பாக எதிர்வரும் 27ஆம் திகதி நுவரெலியாவில் கூட்டணியினர் கூடி கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-(3)