Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ. நா பிரேரணையில் இருந்து இலங்கை விலகவேண்டும் என்று மகிந்த ராஜபக்ஸ வலியுறுத்து

ஐ. நா பிரேரணையில் இருந்து இலங்கை விலகவேண்டும் என்று மகிந்த ராஜபக்ஸ வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிச் செல்ல வேண்டுமென வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையானது, இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் ஐ.நா. கிளை அலுவலகத்தை நிறுவவும் வழிவகுப்பதாய் அமையுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மொழிமூல கேள்விக்கான பதில் நேரத்தில் இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாருஸ்மன் அறிக்கை மற்றும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையின் உள்ளடக்கங்கள் பொய்யான விடயங்கள் என்றும் இவற்றிலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அவ்வாறு இல்லாவிட்டால் மனித உரிமைகளின் மறைவில் இலங்கை நீதிமன்றம் கொச்சைப்படுத்தப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், அவற்றை தடுக்கும் வகையில் அரசாங்கத்திடம் பிரேரணை முன்வைப்பதாகவும், அதற்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *