Search
Saturday 17 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஐ. நா பொதுச்சபை, பாதுகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு அழுத்தம்

ஐ. நா பொதுச்சபை, பாதுகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசு அழுத்தம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு தவறியிருக்கும் நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு சிறிலங்காவை பாரப்படுத்துமாறு நாடு கடந்த அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

பிரித்தானியாவின் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து நாடு கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இது தொடர்பில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக, பிரித்தானியாவின் நோர்த் ஈலிங் பாராளமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் பௌண்ட் ஐ அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், கொடூரங்கள் மற்றும் இனவழிப்புக்கெதிரான அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன், மனித உரிமைகள் பணிப்பாளர் சோபனா ஜீவரட்ணம் மற்றும் நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்கள் நிமல்ராஜ் விக்னராஜ் மற்றும் காண்டீபன் சங்கரப்பிள்ளை ஆகியோர் சந்தித்து தமது கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

நாடு கடந்த அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீபன் பௌண்ட் பிரித்தானிய பாராளமன்றத்தில் இதுதொடர்பில் ஒரு பிரேரணையை கொண்டுவருவதற்கு முயற்சிப்பதாகவும் உறுதியளித்தார். பிரித்தானிய வெளியிறவுச் செயலாளருக்கும் இது தொடர்பில் ஒரு கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் ஆட்சியின் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளபப்டும் கைதுகள், சித்திரவதை, காணி அபகரிப்பு, வட கிழக்கில் இராணுவ பிரசன்னம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு, காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டங்கள் போன்ற விடயங்களும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

IMG-20190113-WA0004


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *