Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒருமித்த நாட்டுக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வை வழங்குவேன் : சஜித்

ஒருமித்த நாட்டுக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வை வழங்குவேன் : சஜித்

ஒருமித்த நாட்டிற்குள் அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை வழங்குவேன் என புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னாரில் அறிவித்துள்ளார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பிரசார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு அறிவித்தார்.
எதிர் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தற்போது அத்திட்டங்களை முன் வைக்க காத்திருக்கின்றோம் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் இன, மத கட்சி பேதமின்றி மீண்டும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கான திட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.
ஒருமித்த இந்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகார பகிர்வினை அனைவருக்கும் இன, மத மொழி கட்சி பேதங்கள் இன்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னுடைய அரசாங்கத்தில் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக இந்த மன்னார் மண்ணிலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதே போன்று சிறுவர் துஸ்பிரையோகம், இனவாதத்தை தூண்டுவோறுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை வழங்குவதற்கு நான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.
நான் ஒரு சிறந்த ஒரு பௌத்தன் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பௌத்த கொள்கைகளை கோட்பாடுகளை சிறந்த முறையில் பின்பற்றி நடக்கக்கூடிய ஒரு பௌத்தனாக இருக்கின்றேன்.
இனத்தை வைத்தோ, மதத்தை வைத்தோ மதங்களை, இனங்களை ஒரு போதும் அழிக்க முடியாது. புத்த பெருமானும் ஒருபோதும் இனங்களை மையமாக வைத்து மதங்களை மையமாக வைத்து மத அழிப்பு நடவடிக்கைகளை, இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என கூறியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *