Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒரு நாட்டின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் கருத்தை முன்வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல-சீ.வி.கே.சிவஞானம்

ஒரு நாட்டின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் கருத்தை முன்வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல-சீ.வி.கே.சிவஞானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்பத்தை ஏற்படுத்துவதற்குப் பழகிக்கொண்டுள்ளார். அதன்பிரகாரம், தேசியத் தலைவர் பிரபாகரன் போதைப் பொருள் விற்பனை செய்தவர் என்ற கருத்தைக் கூறி குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளார். இவர் பன்னாட்டு ரீதியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் ஈடுபட்டதாக சொல்லியிருக்கின்றார் என இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், போதைப் பொருள் விற்றார் என்ற ஜனாதிபதியின் கருத்திற்கு பதிலளிக்கும் போது முன்னாள் வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஒரு ஆதாரமும் இல்லாமல், எழுந்தமானத்தில் இவ்வாறு சொல்வது தவறு. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு நிதி எவ்வாறு சேர்ந்ததென்பது அனைவருக்கும் தெரியும். இந்த மண்ணில் முறைப்படியான நிர்வாகத்தை நடாத்தி, வரி அறவீடுகளை முறைப்படியாக செய்து, முறையான விதத்தில் விடுதலைப் புலிகள் நிர்வாகம் செய்தார்கள்.அவ்வாறான ஒரு இயக்கத்தை போதைப் பொருள் விற்பனை செய்தார்கள் என்பது பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்து என்பதோடு இது கண்டிக்கத்தக்கது. ஆதாரமற்றது. இவ்வாறான கருத்துக்களை ஒரு ஜனாதிபதி கூறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள். இது ஒரு மக்கள் போராட்டமாக இறுதி வரை தொர்ந்தது. போதைப்பொருள் உட்பட புகைத்தல் மற்றும் மதுபான பழக்கமற்ற ஒரு இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். ஏந்தவொரு நாட்டிலும், எந்தவொரு விடுதலை இயக்கங்களுக்கும் இல்லாத ஒரு கட்டுப்பாடு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இருந்தது.

ஜனாதிபதிக்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் இருக்கு 19வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யப் போவதாக சொல்லியிருக்கின்றார். போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக சொல்லியிருக்கின்றார். இவை அனைத்திற்கும் எதிர்ப்புகள் உள்ளன.இந்த எதிர்ப்புகளில் இருந்து தப்புவதற்காக தென்னிலங்கையில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டுவதற்கும் விடுதலைப்புலிகள் போதைப்பொருள் விற்றார்கள் என பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்துக்களை ஜனாதிபதி வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்பதுடன், இவ்வாறான கருத்துக்களை ஜனாதிபதி தவிர்க்க வேண்டுமென வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *