Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒரு மாற்று அணி தமிழ் மக்களுக்கு தேவை-சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஒரு மாற்று அணி தமிழ் மக்களுக்கு தேவை-சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஒரு மாற்று அணி தமிழ் மக்களுக்கு தேவை என்பதுடன், அந்த அணி ஓரிரு கட்சிகள் அல்லாது தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய பலமான அணியாக உருவாக்கப்பட வேண்டும். கொள்கை வழியில், இதனுடன் இணையக் கூடிய சகல தரப்புக்களும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடியவாறு ஒன்றிணைய வேண்டும்.மிக நீண்ட கலந்துரையாடல்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பல தரப்புக்களும் நடத்தியிருக்கின்றன. எனினும், பேச்சுக்களின் மூலம் ஒத்துவராதவர்களை விடுத்து, ஏனைய அனைத்து தரப்பினரும் இணைந்து பலமான மாற்று அணியை உருவாக்க வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமையுடன் மாற்று அணியொன்று உருவாக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *