Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஓய்வு பெறுவதாக மாலிங்க அறிவிப்பு

ஓய்வு பெறுவதாக மாலிங்க அறிவிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் கொழும்பில் நடைபெறும் ஒருநாள் போட்டியின் பின்னர் தான் ஓய்வு பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இவர் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாலும் ரி-20 போட்டிகளில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓய்வு பெற்ற பின்னர் இவர் அவுஸ்திரெலியாவில் குடும்பத்துடன் குடியேறவுள்ளார்.
2004ஆம் ஆண்டு ஜுலை 17ஆம் திகதி ஒருநாள் சர்வதேச போட்டியுடன் தனது திறமையை காட்ட ஆரம்பித்த லசித் மாலிங்க 225 போட்டிகளில் அவர் இலங்கை அணி சார்பாக விளையாடியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *