Search
Sunday 25 February 2018
  • :
  • :

கஞ்சாவுடன் வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞன் கைது

கஞ்சாவுடன் வவுனியா பேருந்து நிலையத்தில் இளைஞன் கைது

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து மொனறாகலை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிசார் குறித்த பயணியின் பயண பொதியினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் பொலிசார் சோதனை செய்த போது அதில் கேரளா கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2 கிலோ 155 கிராம் கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா பொலிசார் சந்தேக குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *