Search
Monday 10 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இப்பொழுதிலிருந்து அடுத்துவரும் மணித்தியாலங்களில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அவசர ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு, கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்பு கொந்தளிப்பானதாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையின்பிரகாரம் அடுத்துவரும் இரண்டு நாட்களில் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கடற்றொழில் நீரியல்வள அமைச்சு அவசரமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, இது சம்மந்தமாக ஏதேனும் நெருக்கடிகள் இருந்தால் தொலைபேசி மூலம் உடனடியாக விளக்கம் கோரலாம் என இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, விளக்கம் கோரலுக்காக 117 அல்லது 0112-67-00-02 என்ற இலக்கங்களை அழைக்கமுடியுமென கூறப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *