Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டு வங்கி ஊழியரும் இரு மகள்களும் பலி

கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டு வங்கி ஊழியரும் இரு மகள்களும் பலி

ஹம்பாந்தோட்டை, கிரிந்த கடலில் சுற்றுலா சென்று நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நால்வரும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள். ஹட்டனில் வாங்கி ஒன்றில் பணிபுரியும் 42 வயதான விஜேசூரிய என்பவரும் அவரின் ஒரு மகளும் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகியிருக்கின்றனர். மேலும், தாயும் மற்றொரு மகளும் மீட்கப்பட்டு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மற்றைய மகளும் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நால்வரும் கிரிந்த கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது வந்த பாரிய அலையில் சிக்கி பலியாகியிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இதேவேளை கிரிந்த உள்ளிட்ட தென்னிலங்கையின் கடற்பகுதிக்கு செல்லவேண்டாம் என்று இலங்கை வளிண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

2 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *