Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கடும் காற்றால் கரை திரும்ப முடியாது தவிக்கும் மீனவர்கள் : மாலைதீவு செல்ல அனுமதி

கடும் காற்றால் கரை திரும்ப முடியாது தவிக்கும் மீனவர்கள் : மாலைதீவு செல்ல அனுமதி

கடற் பிரதேசத்தில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய கால நிலையால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் பல கரை திரும்ப முடியாத நிலைமையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
30 வரையான படகுகள் இவ்வாறாக கரை திரும்ப முடியாது இருப்பதாகவும் இவற்றில் 200 வரையான மீனவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலி , நீர்கொழும்பு , சிலாபம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து கடலுக்கு சென்ற படகுகளே இதற்கு முகம்கொடுத்துள்ளன.
இந்நிலையில் இந்த படகுகளை மாலைதீவு மற்றும் இந்தியன் தீவு பகுதிகளை நோக்கி நகர்த்தி செல்லுமாறு கடற்றொழில் அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *