Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கடும் காற்று வீசும் : சில மாவட்டங்களில் மழை

கடும் காற்று வீசும் : சில மாவட்டங்களில் மழை

நாட்டில் தற்போது நிலவும் காற்று நிலைமை நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்
வளிமணடலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் காலநிலை தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மற்றும் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அனுராதபுரம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் பல தடவைகள்சிறிதளவானமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *