Search
Monday 19 August 2019
  • :
  • :

கடும் மழைக்கான எச்சரிக்கை விடுப்பு!

கடும் மழைக்கான எச்சரிக்கை விடுப்பு!

நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் எனவும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்அதிகரித்து வீசக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலைமாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையும்அதிகரித்து வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மேல்,சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடுமெனவும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி ஏற்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். -(3)4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *