Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி ஒன்றரை மாத குழந்தை பலி : இருவரை காணவில்லை

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி ஒன்றரை மாத குழந்தை பலி : இருவரை காணவில்லை

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மாடிக் கட்டிடமொன்று இடிந்து விழுந்துள்ளது.
இதன்போது கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இதேவேளை இடிபாடுகளுக்குள் மேலும் இரண்டு பேர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை தேடி மீட்புக் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
5 மாடிக் கட்டிடம் திடீரென தாழிறங்கியுள்ள நிலையில் இதன்போது அதற்கு அருகில் இருந்த வீடொன்றின் மீது அதன் இடிபாடுகள் உடைந்து விழுந்துள்ளது. இவ்வேளையில் வீட்டில் இருந்த மூன்று பேர் அதில் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் குழந்தை இன்று காலை மீட்கப்பட்டது.
எவ்வாறாயினும் மீட்கப்பட்டிருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)8Photo (6) Photo (7) shop (6)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *