Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கண்டியில் தொடரும் பதற்றம் இராணுவம் குவிப்பு

கண்டியில் தொடரும் பதற்றம் இராணுவம் குவிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.இந்தநிலையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அத்துடன், இன்று காலை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கண்டிக்கு சென்றுள்ளதுடன், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.இந்தநிலையிலேயே தற்போது அதுரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.1

அமைச்சர் ரிஷாத், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி என்போரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரத போராட்டத்தை வலுச்சேர்க்கும் வகையில், கண்டியில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார்களில் பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் அங்கு உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.இந்நிலையில் அத்துடன் கண்டி நகரில் கலவரம் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக ஆங்காங்கே பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.(15)
34


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *