Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா! 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்

கந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா! 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொரோன தொற்றுக்குள்ளான மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 283 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணி நேரத்தில் 340 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கந்தக்காட்டில் 2 புனர்வாழ்வு முகாம்கள் உள்ள நிலையில் அங்கு 1150 பேர் வரையிலான கைதிகளும் , பணியாளர்களும் உள்ளனர். இவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அந்த பரிசோதனைகளில் 370 பேரின் முடிவுகள் மாத்திரமே இது வரையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்றையவர்களின் முடிவுகள் நாளைய தினத்தில் வெளியாகவுள்ளன. இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *