Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கந்தக்காடு முகாமுக்கு வெளியே 30 பேருக்கு கொரோனா!

கந்தக்காடு முகாமுக்கு வெளியே 30 பேருக்கு கொரோனா!

பொலனறுவை கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை அண்மித்த பிரதேசங்களிலிருந்து 30 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் 57 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன் அவர்களில் 30 பேர் கந்தக்காடு முகாமை அண்மித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
இதன்படி கந்தக்காடு முகாமில் 13 பேரும் , ராஜங்கனை பகுதியில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஹவராதுவ , லங்காப்புல பிரதேசங்களில் இருவரும் , வெலிக்கந்த பிரதேசத்தில் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் முகாமுக்கு வெளியே அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *