Search
Saturday 22 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம்

கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம்

கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு சிவில் உடையில் சென்று கடந்த 10ஆம் திகதி கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கிய சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையில் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தை, இரு பிள்ளைகள் உட்பட மூவரின் நிலைமைகள் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக நேற்று சுமார் இரண்டரை மணித்தியாலயங்கள் கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 10ஆம் திகதி கனகராயன்குளம் பகுதியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்குள்ளாகிய கணவன் மற்றும் இரு பிள்ளைகளின் தாயாரான வசந்தகுமார் சர்மிளா அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காலை 10 மணி முதல் சுமார் இரண்டரைமணி நேரம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை 24 மணி நேரத்திற்குள் மேற்கொண்டு அறிக்கையினை வழங்குமாறு மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கும், வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகத்திற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பவ தினம் குறித்த மூவரும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் தாக்கப்பட்டிருந்தால் அதற்குரிய சட்ட நடவடிக்கையினை உடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தினையடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *