Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்க இடைக்காலத் தடை

கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்க இடைக்காலத் தடை

கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றின் தர்மகர்த்தா சபையினால், திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞசெழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.திருகோணமலை, கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து திருகோணமலை மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து பரிபாலிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களிற்கு பக்தர்கள் சென்று வருவதையும் சமய அனுட்டானங்கள் செய்வதையும் யாரும் தடை செய்ய முடியாது என்றும் அவ்வாறு வழிபடுவதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன் கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டது.

குறித்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி இவ்விடயம் குறித்து தங்களது வாதங்களை முன்வைத்தனர்.அதனடிப்டையில், கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *