Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கம்பஹா மாவட்டத்திலுள்ள 19 பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும்

கம்பஹா மாவட்டத்திலுள்ள 19 பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும்

கம்பஹா மாவட்டத்திலுள்ள 19 பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.மினுவங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் ஊரடங்கு உத்தரவை கம்பஹா பகுதியில் தொடர்ந்து நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து மக்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறினால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *