Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கம்பஹா – மினுவாங்கொட, திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகள் உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு

கம்பஹா – மினுவாங்கொட, திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகள் உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு

திவுலபிட்டியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

அதன்படி, கம்பஹா மருத்துவமனையின் 15 ஊழியர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40 உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கம்பஹா மருத்துவமனையின் சுமார் 15 ஊழியர்களும், அந்தப் பெண் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்களில் சுமார் 40 பேரும் உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *