Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கருணாவை இனியும் நம்பினால் அம்பாறை மாவட்ட தமிழர்கள் அழிக்கப்படுவர் – கலையரசன்

கருணாவை இனியும் நம்பினால் அம்பாறை மாவட்ட தமிழர்கள்  அழிக்கப்படுவர் – கலையரசன்

கருணாவை இனியும் நம்பினால் அம்பாறை மாவட்ட தமிழர்கள் அழிக்கப்படுவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.அம்பாறை மாவட்டம்- பாண்டிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா, இவரை இன்னும் நம்பினால் தமிழர்கள் இனி அழியப்போகின்றோம் என்ற செய்தியைதான் குறிப்பிடுகின்றேன் என தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட இன ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கல்வியாளர்கள் , புத்திஜீவிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள்.தொன்மையான பூர்வீக நிலம், கட்டம் கட்டமாக அழிக்கப்பட்டு தமிழர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்களா என்ற நிலை தோற்றுவிக்கப்படும் .தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது. இந்த அரசு தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றது என மேலும் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *