Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கருணா ஆண் மகனாக இருந்தால் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கோரிக்கை

கருணா ஆண் மகனாக இருந்தால் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கோரிக்கை

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சொல்லியிருக்கிறார். இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.உண்மையிலேயே அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அவர் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.

வடக்கு-கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்றதைப் போன்றே அவர்களின் வார்த்தைகள், அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

போலி முகநூலில் பதிவிடுகின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு ஒரு பொறுப்பான நிலையில் இருக்கின்றதாக கூறிக்கொள்கின்ற கருணா இப்படியான கருத்துக்களை சொல்லக்கூடாது.ஆகவே என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை. கருணா அம்மான் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும். நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இருந்து ஒரு போதும் காட்டிக் கொடுக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *