Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கலகம் அடக்கும் பொலிஸ் பாதுகாப்புடன் அடுத்த போட்டிகள்

கலகம் அடக்கும் பொலிஸ் பாதுகாப்புடன் அடுத்த போட்டிகள்

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டிகள் கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் அந்த போட்டிகளின் போது மைதானத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் 3 ஆம் திகதிகளில் ஒரு நாள் போட்டிகளும் 6ஆம் திகதி ரி-20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்த காலப்பகுதியில் மைதானத்தில் இலங்கை அணி ரசிகர்கள் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்ளலாம் என தகவல்கள் வெளியானதால் அங்கு கலகம் அடக்கும் பொலிஸாரையும் , நீர் தாரை வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் மற்றும் இரசிகர்களுக்கு மத்தியில் சிவில் உடைகளில் அளவுக்கு அதிகமான பொலிஸாரை ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் பல்லேகலவில் நடைபெற்ற போட்டின் போது ரசிகர்களினால் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *