Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கலந்துரையாடல்

கலந்துரையாடல்

எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி  டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை திறப்பு விழா மற்றும் நோர்வூட் பொது மைதானத்தில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டம் என்பனவற்றில் பங்குபற்றவுள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்பது தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல் கூட்டமொன்று நேற்று  நோர்வூட் பொது மைதான கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி  எம். கே.மீகஸ்முல்ல உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் .

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *