Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கல்முனை நோக்கி நாலாபுறமும் படையெடுக்கும் மக்கள்

கல்முனை நோக்கி  நாலாபுறமும் படையெடுக்கும் மக்கள்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி சர்வ மதத்தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த போராட்டம் இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலயத்திற்கு அருகிலிருந்து கல்முனை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணியாக சிறுவர் முதல் பெரியோர் வரை சென்று தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உண்ணாவிரதமிருக்கும் மதகுருமார், சக போராட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவே இந்த அமைதி பேரணி இடபெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக பதாதைகள் ஏந்தி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.4

மேலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக உண்ணாவிரதப் போராட்தில் ஈடுபட்டு தங்களது பூரண ஆதரவினை வழங்கிவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தித் தரகோரி 4வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்,சிங்கள மக்கள் ஆதரவளித்துவருகின்றனர்.இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்றையதினம் கிழக்கு மாகாண ரீதியில் ஹர்தால் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)2 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *