Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கல்முனையில் பதட்டம் முஸ்லிம் தரப்பும் சத்தியாகிரக போராட்டம்

கல்முனையில் பதட்டம் முஸ்லிம் தரப்பும் சத்தியாகிரக போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று வியாழக்கிழமை காலை ஒன்றுகூடிய முஸ்லிம்கள், இவ்வாறு போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.ரஹ்கீப், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் போன்றோரும் சத்தியாகிரகப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

களநிலவரத்தை பொறுத்தவரை பாரிய கலவரம் தோற்றுவிக்கப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாக கல்முனை நகரம் முழுவதும் பெருமளவு இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதத் தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம், இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில், அவர்களுக்கு எதிராகவே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.1

தற்போது பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி சர்வமத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலேயே முஸ்லிம் தரப்பினரும் தமது சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *