Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி மற்றும் விக்னேஸ்வரன் சந்திப்பு

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி மற்றும் விக்னேஸ்வரன் சந்திப்பு

அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த சி.வி.விக்னேஸ்வரன் கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரை வளாகத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்துக் கலந்துரையாடினார்.சங்கரத்ன தேரர் நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர் என்ற வகையில் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொண்டுள்ளதை வரவேற்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.kalmunai-vikki-240719-seithy (2)

இதன்போது கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், சிங்கள மகா வித்தியாலய நிலைமை தற்போது மோசமாக இருப்பதாக கூறியதுடன் கிழக்கில் விதவை பெண்களின் வாழ்வாதாரம் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை ஆழமான விளக்கத்துடன் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *