Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த இணக்கம் காணப்பட்டது

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த இணக்கம் காணப்பட்டது

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

விரைவில் வர்த்தமானி அறிவிப்புடன் இந்த உப செயலகத்தினை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இதற்காக அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், மீண்டும் ஒரு அமைச்சரவை பாத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தார்.

இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் கணக்கு வழக்குகளுக்கு பிரத்தியேக கணக்கதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் 4ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோர் நேற்று போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டிருந்ததுடன் இன்று அத்துரலிய ரத்ன தேரரும் நேரடியாக சென்று ஆதரவு வழங்கி இருந்தார். தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *