Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து TNA வுக்கு அரசாங்கம் வழங்கிய உத்தரவாதம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து TNA வுக்கு அரசாங்கம் வழங்கிய உத்தரவாதம்

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக பிரதமரால்  சம்பந்தனுக்கு  எழுத்து மூல உத்தரவாதம் வழங்கபட்ட பின்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது பற்றி தமிழ் கூட்டமைப்பு எம்.பியான சுமந்திரன் கூறுகையில்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது தொடர்பாக ஆவண பிரதி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிப்பதற்கு முன்னர் தங்களுக்கு கையளிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு அங்கிகாரமொன்று நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்களிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஆவண பிரதி எங்களிடம் கையளிக்கப்பட்டது. நிதி அதிகாரத்திற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்குவதற்கான முதல் நடவடிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. என்றார். (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *