Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாவதாக, பரீட்சைத் திணைக்களம் அளிவித்துள்ளது. ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதேவேளை நேற்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுள்ளது.அத்துடன் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *