Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெறுள்ளது.இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களது ஒளிப்படங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்’, ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே’ போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *