Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காணி விடுவிப்ப்பு தொடர்பில் யாழில் கலந்துரையாடல்

காணி விடுவிப்ப்பு தொடர்பில் யாழில் கலந்துரையாடல்

பொதுமக்களுடைய தனியார் காணிகள் மீண்டும் பொதுமக்களிடமே கையளிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய, பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் மீண்டும் வட. மாகாண ஆளுநரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.இதன் முதற்கட்டமாக ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களை நான்கு வலயங்களாக பிரித்து 62 ஏக்கர் காணிகளை அளந்து அப்பிரதேசத்தின் உரிமையாளர்களை இணங்காணுவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன.இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வடக்கு ஆளுநர் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தநிலையில் வலி. வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான சந்திப்பு யாழில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், வட. மாகாண நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், பிரதேசத்தின் காணி உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பிரதேசத்தின் காணி உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் துரிதமாக அக்காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *