Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காத்தான்குடியில் ஹிஸ்புல்லா அரபுமயமாக்கலை மேற்கொண்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேள பிரதிநிதி குற்றச்சாட்டு

காத்தான்குடியில் ஹிஸ்புல்லா அரபுமயமாக்கலை மேற்கொண்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேள பிரதிநிதி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தனது பதவி காலத்தில் காத்தான்குடியில் அரபு மயமாக்கலை மேற்கொண்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனங்களின் பிரதிநிதியான அபூஸாலி உவைஸ் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக தெரிவித்திருக்கிறார்.

அரபு மயமாக்கல் முஸ்லிம்களின் கலாசாரம் அல்ல என்றும் அது சவூதி அரேபியாவில் ஏனைய நாடுகளின் பிரஜைகளை வெளியற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரமரத்ன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், முஸ்லிம்களின் மதவாத செய்றாடுகளுக்கு அரபு மயமாக்கல் உதவவில்லை என்பதை நிராகரித்தார்.
புனித குர் ஆணை விளங்கிக்கொள்வதற்காகவே அரபு படிப்பிக்கபப்டுகிறது என்றும் காத்தான் குடியில் அரபு எழுத்து சின்னங்களை ஏற்படுத்துவது அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். ஆனால், ஹிஸ்புல்லாவின் காலத்திலேயே இந்த அரபு சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றும் ஆவர் கூறினார்.

காத்தான் குடி மக்கள் மிகவும் செறிந்து வாழும் பகுதி என்றும் 6.5 சதுர கிலோ மீற்றர் அளவில் 50,000 பேர் அங்கு வசிப்பதாகவும் தெரிவித்த உவைஸ் தேசிய தௌகீத் ஜமாத்தின் தலைவர் ஷஹ்ரான் 5 ஆம் வகுப்பு வரையே படித்ததாகவும் காத்தான் குடியில் உள்ள ஒரு அரபு நிலையத்திலும் குருநாகலாவில் உள்ள ஒரு மதரஸாவிலும் படித்தபோதிலும் அவரால் மௌலவியாக வருவதற்கான படிப்பை பூர்த்திசெய்ய முடியவில்லை என்றும் கூறினார்.

2006 ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஒரு அமைப்பை உருவாக்கிய ஷகரன் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு தன்னை ஒரு மிதவாதியாக காட்டியதாகவும் ஆனால் பின்னர் அவரது செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்ததாகவும் இது பற்றி பொலிஸாருக்கு தாம் அறிவித்ததுடன் எதிரான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

DSC_0674_fmt G7MT7ADIKQI6TJUYFKHYBDE47M kaathankudi


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *