மியன்மாரிலிருந்து சுமார் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட ரொகிங்யா முஸ்லீம்கள் கடந்த ஓரு வாரத்தில் வெளியேறி பங்களாதேஸில் தஞ்சம் புகுந்துள்ளதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன
நோய்களுடனும் சிலர் துப்பாக்கி குண்டுகாயங்களுடனும் பங்களாதேஸ் சென்றுள்ளனர் என சர்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.பங்களாதேசிற்கு சென்றுள்ள அனைவரும் தங்களை பதிவு செய்யாததால் உண்மையான எண்ணிக்கையை கணிக்க முடியாமல் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை மியன்மார் பங்களாதேஸ் எல்லையில் பலர் சிக்குண்டுள்ளனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்கள் மிகமிக மோசமான நிலையில் உள்ளனர் உணவு சுகாதார சேவைகள் மற்றும் தங்குமி;டங்களே அவர்களின் அவசர தேவையாகவுள்ளன என சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கி சூட்டு காயங்களுடன் பலர் தப்பிவந்துள்ளனர் என்றும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன இதேவேளை
மியன்மார் படையினரின் தாக்குதலால் ரொகிங்யா முஸ்லீம்கள் மீண்டும் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்டுமாறு பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கியநாடுகளிற்கான பிரிட்டனின் தூதுவர் டுவிட்டர் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
மியன்மார் தொடர்பில் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்டவேண்டும் ரகைனில் காணப்படும் நீண்ட கால விவகாரங்கள் குறித்து ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Postபங்களாதேஸ் அணியின் வெற்றிபயணத்தை நோக்கிய புதிய ஆரம்பம்
Next Postசிரியாவில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றது ஈரான்- இஸ்ரேல் குற்றச்சாட்டு