Search
Tuesday 22 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காலநிலை அனுமதித்திருந்தால் வென்றிருப்போம்

காலநிலை அனுமதித்திருந்தால் வென்றிருப்போம்

காலநிலை அனுமதித்திருந்தால் மேற்கிந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட்போட்டியில் வெற்றி பெற்றிருப்போம் என இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்
ஐந்தாவது நாள் ஆட்டம் மழைகாரணமாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டெஸ்ட்போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கை அணி இந்த டெஸ்டில் விளையாடிய விதம் குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன்,கடந்த ஐந்து நாட்களும் நாங்கள் மிகச்சிறப்பாக விளையாடினோம் காலநிலை அனுமதித்திருந்தால் நாங்கள் வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய பந்துவீச்சாளர்களையும் பாராட்டவேண்டும்,அந்த அணியில் சிறந்த பந்து வீச்சாளார்கள் உள்ளனர்எனவும் குறிப்பிட்டுள்ள தினேஸ் சந்திமல் மேற்கிந்திய தீவுகளில் ஓட்டங்களை பெறுவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *