Search
Saturday 21 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கிண்ணியா வலயப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன

கிண்ணியா வலயப் பாடசாலைகள்  மீண்டும் திறக்கப்பட்டன

டெங்கு பரவல் காரணமாக மூடப்பட்ட திருகோணமலை – கிண்ணியா வலயப் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

டெங்கு காரணமாக கிண்ணியா வலயத்தைச் சேர்ந்த 66 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதற்கமைய, இன்று அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீளத் திறக்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கிண்ணியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தமையால், மூன்று மாணவர்கள் இந்த நோய்க்குப் பலியாகியதோடு, மேலும் சில மாணவர்கள் டெங்கு காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அப் பகுதியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க, இவ் வருடத்தின் இதுவரையாக காலப் பகுதியில் 21,116 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு கூறியுள்ளது.

இவர்களில் 42 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *